செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
பீட்சா, ஜிகிர்தண்டா படங்களை இயக்கிய கார்திக் சுப்புராஜ், காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும் படங்களை இயக்கிய பாலாஜி மோகன், பாலாஜி தரணிதரன் உள்பட பல இயக்குனர்களையும், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, கருணாகரன், சதீஷ், செண்ட்ராயன், காளி போன்ற நடிகர்களையும் தந்த நாளைய இயக்குனர்கள் நிகழ்ச்சியின் 6வது சீசன் தொடங்க உள்ளது.
இதன் 6வது சீசனில் பங்கேற்பதற்காக இதுவரை 1500 படங்கள் வந்த குவிந்துள்ளது. அதிலிருந்து 150 படங்களை தேர்வு குழு இறுதி பட்டியலிட்டுள்ளது. பிரபல சினிமா இயக்குனர்களை கொண்ட நடுவர் குழு அதிலிருந்து 36 படங்களை தேர்வு செய்து கொண்டிருக்கிறது. இந்த படங்களே நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும். இதன் இயக்குனர்களே நிகழ்ச்சிக்கு அழைக்கப்படுவார்கள்.
சீசன் 6 நிகழ்ச்சிகள் 52 முதல் 56 வாரங்கள் வரை ஒளிபரப்பாகும் என்று தெரிகிறது. இதில் பல ரவுண்டுகள் நடத்தப்பட்டு கடைசி ரவுண்டுக்கு நான்கு படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதி சுற்று நடக்கும். அதனை பிரமாண்ட நிகழ்ச்சியாக நடத்த திட்டமிட்டிருக்கிறர் தயாரிப்பாளர் ஜே.வி.மீடியா ஜே.வடிவேல்.
கடந்த சீசன் இறுதி சுற்றில் கே.பாலச்சந்தர், வெற்றி மாறன், சுசீந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள் இந்த சீசனுக்கு இயக்குனராகவும் நடிகராகவும் உள்ள செலிபிரிட்டிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.