மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் | துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் | வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' |
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வருகிற 23ந் தேதி முதல் ஒளிரப்பாகும் புதிய தொடர், ''அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்''. இதில் திரைப்பட குணசித்திர நடிகை லட்சுமி உள்பட 6 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். அசோக்குமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார். செய்யாறு ரவி இயக்குகிறார். சத்யஜோதி தியாகராஜன் தயாரிக்கிறார்.
கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழாவில் தான் காதலித்து மணந்த கணவனுடன் சந்தோஷமாக வாழ்கிறார் அன்னக்கொடி. திடீரென்று ஒரு நாள் கணவன் கடத்தப்படுகிறான். அவனைத் தேடி தன் ஐந்து மகள்களுடன் தமிழ்நாட்டுக்கு வருகிறார். அப்போதுதான் கணவன் தென்காசியை சேர்ந்தவன் என்றும் பெரிய ஜமீன் குடுபத்து வாரிசு என்றும் தெரிய வருகிறது. ஊர் மக்களும், ஜமீன் குடும்பமும் அன்னக்கொடியையும் அவளது மகள்களையும் துரத்தி அடிக்கிறது. அதையும் மீறி அன்னக்கொடி கணவனை எப்படி மீட்கிறார் என்கிற கதை. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.