நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

மலையாள சின்னத்திரை நடிகரான சல்மானுல், தமிழில் மெளன ராகம் சீசன் 2 வில் ஹீரோவக நடித்தார். தற்போது ஆடுகளம் என்ற தொடரில் நடித்து வருகிறார். தமிழிலும் இவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவர் மலையாள சீரியலில் தன்னுடன் இணைந்து நடிக்கும் மேகா மகேஷ் என்பவருடன் அடிக்கடி புகைப்படங்கள் ரீல்ஸ்களை வெளியிட்டு வந்த நிலையில், பலரும் இவர்கள் இருவரும் உண்மையில் காதலிக்கிறார்களா? என கேட்டு வந்தனர்.
அதை உறுதிப்படுத்தும் வகையில் சல்மானுலே தனது இன்ஸ்டாகிராமில் மேகா மகேஷ் உடனான தனது காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதில், ‛‛மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சஞ்சு முதல் மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் ஆகி உள்ளோம். எங்கள் வாழ்வில் மகிழ்ச்சி, அன்பு, அக்கறை, ஏற்ற இறக்கங்கள், துன்பங்கள், பயணங்கள் என அனைத்தையும் பகிர்ந்துகொள்ள முடிவு செய்திருக்கிறோம். எங்களுக்கு ஆதரவளிக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
மெளன ராகம் சீரியல் முடிந்த கையோடு மலையாளத்தில் மிழி ரண்டிலும் என்கிற தொடரில் சல்மானுல் ஹீரோவாக கமிட்டானார். அந்த தொடரில் சல்மானுலுக்கு ஜோடியாக நடித்து வருபவர் தான் மேகா மகேஷ். பல நாட்களாக கேமராவிற்கு முன் மட்டுமே காதலித்து வந்த இந்த ரீல் ஜோடி, மிக விரைவில் ஆப் ஸ்கிரீனிலும் ஜோடி சேர உள்ளனர்.