சிக்கந்தர் தோல்விக்கு காரணம் முருகதாஸா ? சல்மான் கானா ? ; ராஷ்மிகா பதில் | 'சர்வம் மாயா' இயக்குனரின் அடுத்த படத்திலும் இணையும் நிவின்பாலி | வந்தே மாதரம் பாடலை பாட ஏ.ஆர் ரஹ்மான் மறுத்தாரா ? சின்மயி பதில் | மோகன்லால் படத்தை இயக்கும் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனர் | நடிகரை அறைந்தாரா பூஜா ஹெக்டே? தீயாக பரவும் செய்தி | ஏப்ரல் 30ல் திரைக்கு வரும் தனுஷின் 'கர'? | ஓடிடியில் ஹிந்தியில் மட்டுமே வெளியான 'பாகுபலி தி எபிக்' | 'பார்டர்-2' படத்துடன் வெளியாகும் துரந்தர் -2 படத்தின் டீசர்! | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மெஹபூபா முப்தி! | மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரிகிடா சகா! |

ஆல்யா மானசா ஹீரோயினாக நடிக்க சக்கை போடு போட்டு வந்த தொடர் 'இனியா'. இதில், ரிஷி ராஜ், மான்ஸி ஜோஸி, தீபக், பிரவீனா, சாய் மாதவி, ராஜா லோகநாதன் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வந்தனர். இந்நிலையில், இந்த தொடரானது 646 எபிசோடுகளுடன் நவம்பர் 3ம் தேதி முடிவடைந்துள்ளது. இதனையடுத்து அந்த தொடரில் ஹீரோயினாக நடித்து வந்த ஆல்யா மானசா ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடன் நடித்த நடிகர்கள், குழுவினர், வாய்ப்பு அளித்த தொலைக்காட்சி என அனைவருக்கும் தனது நெகிழ்ச்சியான நன்றியினை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இனியா தொடரின் ரசிகர்கள் இனியாவையும், விக்ரமையும் இனி எப்போதுமே மிஸ் செய்யப்போவதாக கவலையுடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.




