இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் | ஜெயிலர் 2 : சிறப்புத் தோற்றத்தில் பகத் பாசில் | 'அருவி' படமே 'அஸ்மா' எகிப்து படத்தின் காப்பி தான்…. | பாகுபலி தி எபிக் - 'டயர்ட்' ஆகும் ரசிகர்கள் | வீராங்கனைகளை உற்சாகப்படுத்த கிரிக்கெட் ஆன்தம் பாடிய ஆன்ட்ரியா | பிளாஷ்பேக் : பாட்டுக்காக எழுதப்பட்ட கதை |

பிரபல சின்னத்திரை நடிகையான பென்சி, இயக்குநர் திருமுருகன் இயக்கிய 'நாதஸ்வரம்' உள்ளிட்ட சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அண்மையில் திருமுருகன் தனது புதிய சீரியலின் கதையை தேர்ந்தெடுத்துவிட்டதாகவும் மிக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் பென்சி அறிவித்திருந்தார். ஆனால், இப்போதுவரை திருமுருகன் குழுவினரின் அடுத்த சீரியல் அப்டேட் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில், பென்சி, 'சிறகடிக்க ஆசை' தொடரில் முக்கியமான ரோலில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக செய்திகள் உலா வருகிறது. அதற்கு காரணம் சிறகடிக்க ஆசை தொடரில் வித்யா கேரக்டரில் நடிக்கும் ஸ்ருதி நாராயணனுடன் பென்சி இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதை வைத்து தான் பென்சி சிறகடிக்க ஆசை தொடரில் நடிக்கிறாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.