இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

மெட்டி ஒலி விஷ்வா விளக்கம் தமிழ் சின்னத்திரையில் டாப் ஹிட் சீரியலான மெட்டி ஒலி சீரியலில் செல்வம் என்கிற கேரக்டரில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் விஷ்வா. 90கள் காலக்கட்டத்தில் சில தொடர்களில் நடித்து வந்த விஷ்வா, திடீரென சீரியல் நடிப்பதிலிருந்து விலகிவிட்டார்.
தற்போது யூ-டியூப் சேனல் நடத்தி வரும் விஷ்வா அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய போது, 'மெட்டி ஒலி சீரியல் நடித்த பிறகு மீண்டும் ஒரு மெட்டி ஒலி சீரியல் வேண்டும் என்று நினைத்தேன். குறைந்தபட்சம் மெட்டி ஒலி அளவிற்காவது ஒரு சீரியல் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், எல்லா சீரியலும் மெட்டி ஒலி ஆக முடியாது. அதுமட்டுமில்லாமல் எனக்கும் ஒரு சில வேலைகள் இருந்ததால் அதில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டேன்' என்று கூறியுள்ளார்.