ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
சிறகடிக்க ஆசை தொடரின் கதாநாயகியான கோமதி பிரியா, சிம்பிளான தோற்றத்துடனும் எளிமையான நடிப்பாலும் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த ஆண்டுக்கான விஜய் டிவி விருது நிகழ்வில் கோமதி பிரியாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. அப்போது பேசிய கோமதி பிரியா, 'இந்த மீனா கேரக்டர் என்னுடைய நிஜ வாழ்விலும் மிகவும் மேட்ச் ஆனது. இந்த சீரியலில் எனக்கு எப்படி அப்பா இல்லையோ அது போல என் நிஜ வாழ்விலும் எனக்கு அப்பா இல்லை. அம்மா தான் தனியாக கஷ்டப்பட்டு எங்களை வளர்த்தார். நான் சென்னைக்கு வந்த புதிதில் மிகவும் கஷ்டப்பட்டேன். வாய்ப்பு எளிதாக கிடைத்துவிடவில்லை. ஆனால் இப்போது மக்கள் எனக்கு அங்கீகாரம் கொடுத்திருக்கிறார்கள்' என்று பேசியிருந்தார். அப்போது கோமதி பிரியாவின் அப்பாவின் உருவத்தை ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் கொண்டு வந்த விழா குழுவினர் அவர் தனது மகளை வாழ்த்துவது போல் எடிட் செய்திருந்தனர். அதை பார்த்த கோமதி பிரியா மகிழ்ச்சியில் நெகிழ்ந்து போனார்.