தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' | ஹாரர், திரில்லராக உருவாகும் 'தி பிளாக் பைபிள்' | பிளாஷ்பேக் : பாடல்களுக்காக உருவான படம் | பிளாஷ்பேக் : முதல் படத்திலேயே நீக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் காட்சிகள் |
பிரபல சின்னத்திரை நடிகையான தீபா, பிரியமான தோழி, அன்பே சிவம், நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல ஹிட் தொடர்களில் வில்லியாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். இவர் சிறந்த முருக பக்தை என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், இவர் முருகன் ஆணைக்கிணங்க தொட்டியம் அருகேயுள்ள ஏலூர்பட்டியில் கோவில் ஒன்றை கட்டியுள்ளாராம்.
இதுகுறித்து அவர் சொன்ன போது, 'மாங்காட்டு காமாட்சியம்மன் கோவில் சென்றுபோது அங்கே முருகனின் பெயரில் உள்ள சுப்பிரமணியன் என்கிற சாமியாரை பார்த்தேன். அவர் தொட்டியம் அருகே காசிவிஸ்வநாதர் கோவில் கட்டப்பட்டு வருவதை எனக்கு சொன்னார். அவரை பார்த்த சில நாட்களிலேயே முருகனுக்கு கோவில் எழுப்ப அங்கு போ என்று எனக்கு தோன்றியது. அடுத்த நாளே அங்கு சென்று ஊர்க்காரர்களுடன் அந்த வேலைகளை பார்க்க ஆரம்பித்தேன். இப்போது எல்லா வேலையும் முடிந்து கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது. இதில் என்னுடன் மெட்டி ஒலி வனஜா, கம்பம் மீனா, மின்னல் தீபா, அழகப்பன் ஆகியோருக்கும் பங்கு இருக்கிறது' என்று கூறியுள்ளார்.