ஓடிடி-க்கு தயாரான நானியின் 'கோர்ட்' | இந்திய பொழுதுபோக்கு துறையின் மதிப்பு 100 பில்லியன் டாலராக உயரும் : பிக்கி தலைவர் கமல் நம்பிக்கை | 2025 தமிழ் சினிமா - காலாண்டு ரிப்போர்ட் | பிளாஷ்பேக் : டி.ராஜேந்தரை ஹீரோவாக்கிய ரஜினி | பிளாஷ்பேக் : ஆதித்தியன் கனவை நனவாக்கிய பாடல் | ஜி.வி.பிரகாசுக்கு கை கொடுக்குமா 'பிளாக்மெயில்'? | 'எம்புரான்' படத்தை எதிர்த்து தமிழ்நாட்டு விவசாயிகள் போராட்டம் | குட் பேட் அக்லி ஓடிடி வெளியாகும் தேதி | வெளிவரும் முன்பே வெற்றிக்கு வழிவகுத்த "கேங்கர்ஸ்" | திரைப்பட விழாவில் 'சந்தோஷ்': மத்திய அரசு அனுமதிக்குமா? |
சின்னத்திரை நடிகையான பானுமதி அண்ணா, இனியா, சின்ன மருமகள் ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய இவர், தனது கடந்த கால சோக வாழ்க்கை குறித்து பேசியிருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் பேசிய பானுமதி, 'எனக்கு 16 வயதிலேயே திருமணம் முடிந்தது. 2 ஆண் குழந்தைகள் பிறந்தார்கள். என் கணவர் அதிகமாக குடித்து மஞ்சள் காமலை நோயால் உயிரிழந்தார். ஆனால், கணவரது வீட்டார் நான் அவரை கொன்றுவிட்டதாக கூறினார்கள். அதன்பின் அவர்கள் உறவே வேண்டாம் என்று பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டேன்.
குடும்பத்திற்காக சீரியல்களில் துணை நடிகையாக 500 ரூபாய் சம்பளத்தில் நடிக்க ஆரம்பித்தேன். குழந்தைகளுக்காக இரண்டாவது திருமணம் செய்தேன். அந்த வாழ்க்கையும் சரியாக அமையவில்லை. அதன்பிறகு மீண்டும் குடும்பத்திற்காக ஓட ஆரம்பித்தேன். எனது மகன்களை தற்போது நல்லபடியாக வளர்த்திருக்கிறேன்' என்று கூறியுள்ளார். அவரது சோகக்கதை ரசிகர்களை மிகவும் வருத்தமடைய செய்துள்ளது.