'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தமிழ்நாடு சின்னத்திரை இயக்குனர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் அறிமுக விழா நடந்தது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ் முருகன் முன்னிலை வகித்தார்.
சங்கத்தில் புதிதாக சேர்ந்த உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை மற்றும் தமிழ்நாடு அரசு வழங்கும் நல வாரியத்தின் மூலம் கிடைக்கும் நலவாரிய அட்டையையும் செய்தித்துறை அமைச்சர் வழங்கி வாழ்த்தி பேசினார் .
சங்கத்தின் புதிய தலைவர் மங்கை அரிராஜன் பேசும்போது “சின்னத்திரை இயக்குனர்களுக்கான புதிய ஊதிய உயர்வு வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இனி சின்னத்திரை தயாரிப்பாளர்கள் இந்த புதிய ஊதிய உயர்வை கொடுக்க வேண்டும். சங்கத்தில் உறுப்பினர்கள் அல்லாதவர்கள் இனி சின்னத்திரை சீரியல்களில் பணிபுரியக் கூடாது. சங்கத்தில் உறுப்பினராக உள்ள இயக்குனர்கள் மற்றும் உதவி துணை, இணை இயக்குனர்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும்” என்றார்.
விழாவில் பெப்சி தலைவர் ஆர் கே செல்வமணி, தயாரிப்பாளர் எஸ் தானு, நடிகர் எஸ்வி சேகர், திரைப்பட இயக்குனர் சங்க செயலாளர் பேரரசு, கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம், குட்டி பத்மினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.