2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

சின்னத்திரை நடிகை நீபாவின் தாயாரான மாலினி, நடிகை தேவயானி குறித்து நெகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளார். நீபாவின் தாய் மற்றும் தந்தையான மாலினி - வாமன் தம்பதியினர் சினிமாவில் டான்சராக பணிபுரிந்துள்ளனர். ஒருக்கட்டத்தில் வாமன் இறந்த பிறகு வாய்ப்புகள் இன்றி தவித்த மாலினி, தேவயானி - ராஜகுமாரன் தயாரித்து இயக்கிய காதலுடன் படத்தில் வாய்ப்பு கேட்டு சென்றுள்ளார். அப்போது மாலினியை பார்த்த தேவயானி 'நீங்க எவ்வளவு பெரிய உழைப்பாளி. உங்க அனுபவம் எங்களுக்கு தேவை. இவங்களுக்கு கண்டிப்பா வாய்ப்பு கொடுக்கணும்' என்று கணவரிடமும் சிபாரிசு செய்துள்ளார். இதன்மூலம் அந்த படத்தின் அனைத்து பாடல்களுக்கும் மாலினி டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்தார். இந்த நெகிழ்ச்சியான செய்தியை அண்மையில் மாலினி அளித்துள்ள பேட்டியில் கூறியிருக்கிறார்.