ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட தொடர் 'எதிர்நீச்சல்'. பெரிய வரவேற்பை பெற்ற 'கோலங்கள்' தொடரை இயக்கி, நடித்த திருச்செல்வம் தான் இந்த தொடரை இயக்கி வந்தார்.
இந்த தொடரில் வில்லனாக ஆதி குணசேகரன் என்கிற கேரக்டரில் திரைப்பட நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து நடித்து வந்தார். தன்னுடைய மிரட்டலான நடிப்பாலும் நக்கலான டயலாக் டெலிவெரியாலும் ரசிகர்களை கவர்ந்தார். அதிலும் அவர் பேசும் 'இந்தாம்மா ஏய்' என்கிற வசனம் ஹிட்டானது. இதைத்தொடர்ந்து தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மாரிமுத்து திடீரென மரணம் அடைந்தார். இதனால் இந்த தொடர் பெரும் பின்னடைவை சந்தித்தது. அவருக்கு பதிலாக வேல ராமமூர்த்தி நடித்தார். ஆனால் அவரது நடிப்பு வரவேற்பு பெறவில்லை. கடந்த சில நாட்களுக்கு தொடரின் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் இணைந்து குழு போட்டோ எடுத்துக் கொண்டனர். அந்த போட்டோ வைரலாகி வருகிறது. இதை வைத்து பார்க்கையில் விரைவில் ‛எதிர்நீச்சல்' சீரியல் முடிவுக்கு வருகிறது.