தண்டேல் : நாக சைதன்யாவின் முதல் 100 கோடி | மம்முட்டி வில்லனாக நடிக்கும் ‛கலம்காவல்' | ஹரிஷ் கல்யாணுக்காக பாடியுள்ள சிம்பு! | வெப் தொடருக்காக ஒன்றிணையும் மாதவன், துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக்! | தனுஷின் அடுத்த ஹிந்தி படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ஜனநாயகன் பட தயாரிப்பாளர் உடன் கைகோர்க்கும் போர் தொழில் பட இயக்குனர்! | ஆறு மாதத்திற்கு முன்பே சம்பளம் தந்த கமலுக்கு நன்றி சொன்ன சிவகார்த்திகேயன் | ரூ. 25 கோடி வசூலைக் எட்டிய குடும்பஸ்தன் படம்! | தனுஷ், தமிழரசன் பச்சமுத்து படத்திற்கு இசையமைக்கும் அனிருத்! | ‛‛எந்த விபத்தும் ஏற்படவில்லை, நலமுடன் இருக்கிறேன்'' - நடிகர் யோகி பாபு விளக்கம் |
சின்னத்திரை இயக்குனர்கள் சங்கத்தில் 1201 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அந்த வகையில் 2024 - 2026ம் ஆண்டுக்கான தேர்தல் நடந்தது. இதில் 585 பேர் ஓட்டளித்தனர். இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மங்கை அரிராஜன் 310 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.
இவர் தவிர பொதுச்செயலாளராக ஆர் அரவிந்தராஜ், பொருளாளராக அறந்தாங்கி சங்கர், துணைத் தலைவர்களாக எஸ்.வி சோலைராஜா, குட்டி பத்மினி, இணை செயலாளர்களாக ஆதித்யா மற்றும் விக்ராந்த் ஆகியோர் வெற்றி பெற்றனர். நக்கீரன், அழகு லிங்கம், கோபி பீம்சிங், தாமஸ் கென்னடி, பெருமாள் நேர், சக்தி, சோழன் (என்கின்ற) அறிவழகன், காயத்ரி ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.