ஜனநாயகன் பட வழக்கில் ஜன., 27ல் தீர்ப்பு | அஜித் 64ல் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு : ஆதிக் ரவிச்சந்திரன் | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரீத்தி முகுந்தன் | மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி | விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் | 32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி | மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது | 84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு : தனுஷ் பட இயக்குனர் விளக்கம் |

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அசத்தி வருபவர் கிகி (கீர்த்தனா). நடன நிகழ்ச்சிகளிலும் பேங்கேற்றுள்ளார். இயக்குனர் கே.பாக்யராஜின் மகனும், நடிகருமான சாந்தனுவை காதலித்து திருமணம் செய்தார்.
கிகி தி நகரில் சின்னதாக ஒரு நடன பள்ளியை நடத்தி வருகிறார். தற்போது தனது பெயரில் 'கிகி டான்ஸ் ஸ்டூடியோ' ஒன்றை சென்னை திருவான்மியூரில் தொடங்கி உள்ளார். இதன் தொடக்க விழாவில் பூர்ணிமா பாக்யராஜ், நடிகர் கலையரசன், பரத், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜனனி, சம்யுக்தா ஷான், சுஹாசினி மணிரத்னம், காயத்ரி ரகுராம் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு கிகி மற்றும் சாந்தனு பாக்யராஜிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.




