இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் செப் வெங்கடேஷ் பட் நீண்ட நாட்களாக நடுவராக இருந்து வந்தார். தற்போது அவர் அந்த சேனலிலிருந்து விலகி வேறொரு தனியார் சேனலில் டாப்பு குக்கு டூப்பு குக்கு என்ற நிகழ்ச்சியில் இணைந்துள்ளார். இந்நிலையில், அவர் எதற்காக விஜய் டிவியை விட்டு விலகினார் என்கிற கேள்வியை பலரும் கேட்டு வந்தனர்.
அதற்கு பதிலளித்த வெங்கடேஷ் பட், 'நான் விஜய் டிவியில் தொடர்ந்து 24 வருடங்களாக கிச்சன் சூப்பர் ஸ்டார், கிச்சன் சூப்பர் ஸ்டார் ஜூனியர், குக் வித் கோமாளி போன்ற பல நிகழ்ச்சிகளில் பணியாற்றியுள்ளேன். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் மீடியா மேஷன்ஸ் நிறுவனம் தான் தயாரித்தது. மீடியா மேஷன்ஸ் நிறுவனத்திற்கும் விஜய் டிவிக்கும் இடையே நடந்த பிரச்னை காரணமாக அவர்கள் சேனலை விட்டு வெளியேறினர். எனக்கு கம்போர்ட் ஷோன் அவர்கள் தான். அதனால் தான் அவர்களுடன் சேர்ந்து நானும் வெளியே வந்தேன். நான் விஜய் டிவியில் இருந்து விலகவில்லை. எனக்கும் விஜய் டிவிக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை' என்று கூறியுள்ளார்.