ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்த தீபிகா படுகோனே : வெளியேறவில்லை.. வெளியேற்றப்பட்டார் | போலீஸ் பாதுகாப்பை மீறி சல்மான் கான் வீட்டுக்கு செல்ல முயன்ற பெண் கைது | மைசூர் சாண்டல் சோப் தூதராக தமன்னா நியமனம் : வலுக்கும் எதிர்ப்பு | ரவி மோகன், ஆர்த்திக்கு கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு | 24 ஆண்டுகளுக்கு பின் தமிழில் ரவீனா டாண்டன் | முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட ஏஆர் ரஹ்மான் | நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் : பாடகி கெனிஷா பதிவு | வதந்தி 2 வெப்சீரிஸின் படப்பிடிப்பு எப்போது? | ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் |
நடிகர் ஸ்ரீகுமார் தான் நடிக்கும் சீரியல்களில் மிகவும் டெடிகேஷனுடன் நடித்து வருகிறார். அதிலும் குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளுக்காக அதிக ரிஸ்க் எடுத்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் தற்போது தன்னுடன் நடிக்கும் சக நடிகையையும் ரிஸ்க்கான ஸ்டண்ட் காட்சியில் நடிக்க வைத்துள்ளார். வானத்தைப் போல சீரியலில் ஸ்ரீகுமார், சாந்தினி இருவரும் ஜோடியாக நடித்து வருகின்றனர். அந்த சீரியலின் ஒரு காட்சியில் சாந்தினியும், ஸ்ரீகுமாரும் பைக்கிலிருந்து கீழே விழுவது போல் படமாக்கப்பட்டுள்ளது. அதற்காக இருவரும் உண்மையாகவே பைக்கிலிருந்து கீழே விழுந்து ஸ்டன்ட் செய்துள்ளனர். அந்த ரிஸ்க்கான ஸ்டண்டை ஸ்ரீகுமார் தனது இண்ஸ்டாகிராமில் வெளியிட ரசிகர்கள் இருவரையும் பாராட்டி வருகின்றனர்.