'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி |
நீயா நானா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கோபிநாத்துக்கு அண்மையில் பாராட்டு விழா நடத்தியுள்ளனர். அந்த விழாவில் சற்றும் எதிர்பாராத வகையில் பாரா ஒலிம்பிக் விளையாட்டில் விளையாடிய மாற்றுத்திறனாளி வீரர்கள் கலந்து கொண்டனர். அவர்கள், தாங்கள் பாரா ஒலிம்பிக்கில் விளையாட காரணமாகவும் அதற்காக பல உதவிகளையும் செய்தவர் கோபிநாத் தான் என்று நெகிழ்ச்சியாக பேசியதோடு பாரா ஒலிம்பிக்கில் வாங்கிய மெடல்களை கோபிநாத் கையால் அணிவிக்க சொல்லி கவுரவப்படுத்தியுள்ளனர்.
இந்த வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது. அத்துடன் கபடி வீராங்கனை ஒருவர் தனது கல்லூரி படிப்பிற்காக உதவிகேட்டபோது அவருடன் சேர்ந்த 11 பெண்கள் படிப்பதற்கும் கோபிநாத் உதவி செய்துள்ள தகவலும் தற்போது இணையதளத்தில் பரவி வருகிறது. இதனையடுத்து பலரும் கோபிநாத்தை புகழ்ந்து பாராட்டி வருகின்றனர்.