கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? |
விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சி தொகுப்பாளரான வீஜே பிரியங்கா தேஷ்பாண்டே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மேலும் பெயர் புகழுடன் வலம் வருகிறார். பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரியங்கா முன்னதாக பல மேடைகளில் தனது கணவர் குறித்து நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார். ஆனால், சமீபகாலங்களில் பிரியங்கா தனது கணவர் குறித்து பேசுவதில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது கூட எந்தவொரு இடத்திலும் தனது கணவர் பற்றி பேசவில்லை. இதனால் இருவரும் பிரிந்துவிட்டார்களா? என்று அப்போதே கேள்விகள் எழுந்தது. ஆனாலும், பிரியங்கா தரப்பிலிருந்து அதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வரவில்லை.
இந்நிலையில், ப்ரியங்கா தனது அம்மாவுடன் சமீபத்தில் நேர்காணல் ஒன்றை கொடுத்திருந்தார். அப்போது பேசிய பிரியங்காவின் தாயார், 'பிரியங்காவை நினைத்து நான் மிக பெருமைப்படுகிறேன். ஆனால், இப்போது அவள் வாழ்க்கையில் செய்த தவறை மீண்டும் செய்யக்கூடாது என்று சத்தியம் செய்ய வேண்டும். சரியான நபரை மீண்டும் தேர்வு செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளார். இதன் மூலம் பிரியங்கா தனது காதல் கணவர் பிரவீனை பிரிந்துவிட்டார் என்பது உறுதியாகியுள்ளது.