குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
சின்னத்திரையில் இனியா தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமாகியுள்ளார் நடிகை ப்ரீத்தா ரெட்டி. இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் சினிமாவில் அட்ஜெஸ்மெண்ட் டார்ச்சர் அனுபவித்ததால் சின்னத்திரை பக்கம் வந்துவிட்டதாக கூறியுள்ளார். அவர் கூறியதாவது, 'சினிமாவில் ஆடிசனிலும் தேர்வான பிறகு ஒப்பந்தம் கையெழுத்து போடும் போது சில நிபந்தனைகளை வைப்பார்கள். அதனால் அந்த வாய்ப்பே வேண்டாம் என்று சொல்லி வந்திருக்கிறேன். சில இயக்குநர்கள் அட்ஜெஸ்மெண்ட் கேட்பார்கள். நடிக்கும் வாய்ப்பிற்காக அதை செய்தே ஆக வேண்டும் என்றால், அதையே தொழிலாக செய்யலாமே?. இதனால் தான் சினிமாவை விட்டு சீரியலுக்கு வந்துவிட்டேன். ஆனால், சின்னத்திரையில் இந்த பிரச்னை இல்லவே இல்லை என்று சொல்லிவிட முடியாது. எனக்கு அதுபோல் இதுவரை எதுவும் நடக்கவில்லை' என்று கூறியுள்ளார். ப்ரீத்தா தற்போது சின்னத்திரையில் சீரியல்கள் மற்றும் ஷார்ட் பிலிம்கள் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.