‛நரிவேட்டை' முதல் ‛8 வசந்தலு' வரை... ஓடிடியில் இந்தவார வரவு என்னென்ன...? | பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் |
இயக்குநர் திருச்செல்வம் எதிர்நீச்சல் தொடரின் மூலம் கம்பேக் கொடுத்து அசத்தி வருகிறார். மேலும், அதே தொடரில் ஜீவானந்தம் என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். தற்போது ஜீவானந்தம் கதாபாத்திரத்தை முக்கிய கதாபாத்திரமான ஈஸ்வரியின் முன்னாள் காதலனாக காட்டி வருகின்றனர். இதனையடுத்து ஜீவானந்தம் தான் ஹீரோவா? க்ளைமாக்ஸில் அவரும் ஈஸ்வரியும் ஒன்று சேர்வார்களா? என்றெல்லாம் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
இதற்கு பதிலளித்துள்ள திருச்செல்வம், 'ஆரம்பத்தில் ஜீவானந்தம் கதாப்பத்திரம் சில நாட்களுக்கு என்று தான் தொடங்கப்பட்டது. இப்போது கதையின் முக்கியத்துவத்துக்கு ஏற்ப பயணிக்க தொடங்கியுள்ளது. இனி வரும் நாட்களில் கதையின் போக்கு மற்றும் ரசிகர்களின் வரவேற்புக்கு ஏற்றவாறு ஜீவானந்தம் கதாபாத்திரம் தொடரும். ஆனால், அதிக நாட்கள் ஜீவானந்தம் கதாபாத்திரம் இருக்காது' என்று கூறியுள்ளார்.