ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
எதிர்நீச்சல் தொடரில் ஜான்சி ராணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை காயத்ரி கிருஷ்ணன். முன்னதாக அயலி வெப் தொடரில் நடித்திருந்தாலும் ஜான்சி ராணி கதாபாத்திரம் தான் காயத்ரி கிருஷ்ணனுக்கு அதிக புகழை தேடி தந்துள்ளது. ஊடகங்களில் டிரெண்டிங்காக வலம் வரும் காயத்ரி கிருஷ்ணன், தற்போது பிரபல யூ-டியூபரான சாப்பாட்டு ராமனுடன் சாப்பாடு சாப்பிடும் போட்டியில் பங்கெடுத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில் 'ஜான்சி ராணியா? சாப்பாட்டு ராமனா? யாருக்கு வெற்றி?' என ரசிகர்கள் ஆவலாக கேட்டு வருகின்றனர். முன்னதாக சின்னத்திரை நடிகை காயத்ரி யுவராஜும் சாப்பாட்டு ராமனுடன் போட்டியிட்டு சாப்பிட முடியாமல் தோற்றுப்போனார் என்பது குறிப்பிடத்தக்கது.