மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா! நாளை பர்ஸ்ட் லுக்! | 'துரந்தர்' 2ம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! - பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் | 'இருமுடி' படத்தில் காவேரி ஆக பிரியா பவானி சங்கர்! | பாலகிருஷ்ணா 111வது படத்தில் நயன்தாரா மாற்றமில்லை! | நானி, வெங்கி அட்லூரி கூட்டணி படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பான் இந்தியா படங்களோடு மோதும் கென் கருணாஸின் 'யூத்' | மீண்டும் விஜய் பட தலைப்பில் புதிய பட அறிவிப்பு! | "எமோ எமோ இதி" ரோசன் மெக்கா, பிரீத்தி முகுந்தன் புதிய தெலுங்கு பட அறிவிப்பு! | "மகான் 2ம் பாகம் உருவாகிறது" - கார்த்திக் சுப்பராஜ் தகவல்! | சிவகார்த்திகேயன் படத்தில் கதாநாயகி, இசையமைப்பாளர் யார் தெரியுமா? |

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா ஆகியோர் இணைந்து நடித்து கடந்த வாரத்தில் திரைக்கு வந்த படம் 'பராசக்தி'. இந்த படத்திற்கு கிடைத்த சுமாரான வரவேற்பிற்கு சுதா கொங்கரா கடந்த சில நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் இதற்கு காரணமாக விஜய் ரசிகர்களை குறை கூறினார். இதனால் சுதா கொங்கரா மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இதைத்தொடர்ந்து சுதா கொங்கரா இன்று ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, "இப்போது நடக்கும் விவகாரங்கள் குறித்து கூற வேண்டும் என்றால், பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நான் தெளிவாக கூறினேன். விஜய் சாரின் படத்தை நானும் முதல் நாள், முதல் காட்சி சென்று பார்ப்பேன். 'ஜனநாயகன்' வெளியாகுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தணிக்கை இப்படி செய்தது தவறு, எந்தப் படத்திற்கும் அப்படி நடக்கக் கூடாது.
நாங்கள் ஜனநாயகன் படத்துடன் போட்டியிட நினைக்கவே இல்லை. நாட்டின் மிகப்பெரிய நட்சத்திரத்தோடு போட்டியிட முடியுமா?. எங்களுக்கும் பண்டிகை விடுமுறை வெளியீடு தேவைப்பட்டது, அவ்வளவு தான் காரணம். விஜய் சாரை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். அவருடைய மிகப்பெரிய ரசிகை. இதில் சந்தேகமே வேண்டாம். இதை விஜய் சாரிடம் நேரில் கூட கூறியுள்ளேன். நாங்கள் இணைந்து படம் பண்ணுவதற்கு சூழல் இருந்தது. ஆனால், ஒரு சில காரணங்களால் அது நடக்கவில்லை." என விஜய் ரசிகர்களை சமாதானப்படுத்துவது போன்று சுதா கொங்கரா பேசியுள்ளார்.