175ஐத் தொட்டது 2023ல் வெளியான தமிழ்ப் படங்கள் | விடாமுயற்சி - அஜர்பைஜான் புறப்படும் அஜித் | தனது நிறுவனத்திற்கு ஓகே, சினிமாக்கு நோ : நயன்தாரா பாலிசி | 'முனி 4' போல அடுத்து 'அரண்மனை 4' | ‛அப்பா' படம் வரி விலக்கிற்கு லஞ்சம் கொடுத்தேன் - சமுத்திரகனி | துருவ நட்சத்திரம் படத்திற்கு 11 இடங்களில் கட் | ராஜா ராணி டூ ஜவான் : ப்ரியா அட்லியின் நெகிழ்ச்சி பதிவு | டைகர் ஷெராப் படத்தின் தமிழ் டீசரை வெளியிட்ட த்ரிஷா | புடவை கட்டினாலும் சாந்தினி ஹாட் தான் | வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் சமீரா ஷெரீப் : கம்பேக் எப்போது? |
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நட்சத்திர நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இதன் 9வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த சில மாதங்களாக நடந்து வந்த இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. வழக்கம் போல இந்த சீசனையும் பிரியங்கா மற்றும் மாகாபா இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்கள். நிகழ்ச்சியின் நடுவர்களாக பென்னி தயால், அனுராதா ஸ்ரீராம், உன்னி கிருஷ்ணன் மற்றும் ஸ்வேதா மோகன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் அடுத்தடுத்த பிரபலங்கள் இணைந்து வருகிறார்கள்.. பாக்யராஜ், டி.ராஜேந்தர், வித்யாசாகர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள். இந்நிலையில் வரும் வாரத்தில் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக யுவன் சங்கர் ராஜா இணைகிறார்.
“இந்த நிகழ்ச்சியில் இணைவதற்கு தான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்க வேண்டும் . சிறப்பான குரல் தேடல்களை தொடர்ந்து செய்து வரும் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தான் பார்த்து வருகிறேன். என்னை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தேர்வு செய்த நடுவர்களுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார் யுவன்.