புருவ அழகுக்கு ஞாபக மறதி : அறிமுகப்படுத்திய இயக்குனர் தாக்கு | ராமனாக நடித்தது அதிர்ஷ்டம் - பிரபாஸ் | விஜய் பிறந்த நாளில் வெளியாகும் இரண்டு அப்டேட் | கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்வாரா பாஸ்கர் | மேகா ஆகாஷ் திருமண செய்தி உண்மையல்ல... | ஹீரோயினாக நடிக்கும் அஸ்மிதா | 23ம் தேதி வெளியாகிறது 'கேரளா கிரைம் பைல்ஸ்' | மைசூரில் ஜாலியாக ஊர் சுற்றும் ராம் பொத்தனேனி, ஸ்ரீலீலா | மம்முட்டி கிடைக்காததால் பசுபதியை நடிக்க வைத்தேன்: 'தண்டட்டி' இயக்குனர் சொல்கிறார் | பல கோடிக்கு பைக்குகள் வாங்கிய அஜித்? |
சின்னத்திரையில் ரோஜா சீரியலில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. தற்போது ஜீ தமிழில் சீதா ராமன் தொடரில் நடித்து வருகிறார். பிரியங்காவுக்கு முன்னதாக ராகுல் வர்மா என்ற தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் அதன்பின் அந்த திருமணம் நின்றுவிட்டதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில், பலருக்கும் அதிர்ச்சி தரும் வகையில் பிரியங்காவும், ராகுல் வர்மாவும் திடீரென கோயிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர். அதன்புகைப்படங்களை பிரியங்கா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
இந்த திருமணத்தில் இருவரது பெற்றோர்களோ, நண்பர்களோ கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் தான் பிரியங்காவின் சகோதரியின் திருமணம் கோலகலமாக நடந்தது. அதேபோல் பிரியங்காவின் திருமணமும் பிரம்மாண்டமாக நடைபெறும் என பலரும் நினைத்திருந்த வேளையில், பிரியங்காவும் ராகுலும் திடீரென ரகசிய திருமணம் செய்துள்ளனர்.