'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் மணிமேகலை. விஜய் டிவியில் அவர் 'மிஸ்டர் அணட் மிஸ்ஸஸ்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பின்னர் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் தொடர்ந்து கோமாளியாக கலக்கி வந்தார். நடிகர் ராகவா லாரன்ஸ் மாஸ்டரிடம் உதவி நடன இயக்குனராக இருந்த ஹூசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். பெற்றோர்களின் ஆதரவு இல்லாமல் திருமணம் செய்துக்கொண்ட அவர்கள் தற்போது வரை தனியாக வாழ்ந்து வாழ்வில் அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறி வருகின்றனர்.
இந்நிலையில் தனது கணவர் ஹூசைனுடன் இஸ்லாமிய உடையில் மணிமேகலை இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வந்தது. இதை பார்த்த ஒரு சில நெட்டிசன்கள், மணிமேகலை இஸ்லாமிய மதத்திற்கு மாறிவிட்டாரா என்று கேள்வி எழுப்பி கருத்துக்களை பதிவிட்டனர். நேற்று அந்த கருத்தை எழுப்பிய நபருக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார் மணிமேகலை. "இப்படி வாழ்க்கை முழுவதும் உளறிக் கொண்டு இருப்பதற்கு போய் உருப்படுகின்ற வழியை பார்க்கலாம்ல" என கூறியுள்ளார்.