அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நம்பர் 1 எண்டர்டெயின்மெண்ட் நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். முதல் மூன்று சீசன்களின் வெற்றியை தொடர்ந்து நான்காவது சீசனுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சில தினங்களுக்கும் முன் மணிமேகலை திடீரென இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். அதைத்தொடர்ந்து மற்றொரு காமெடி நட்சத்திரமான குரேஷியும் சீசன் 4லிருந்து விலகுவதாக செய்திகள் வெளியானது.
இது உண்மைதானா என ரசிகர்கள் தவித்து வந்த வேளையில் குரேஷியும் தனது டுவிட்டர் பக்கத்தில், 'குக் வித் கோமாளி நிகழ்ச்சி கொடுத்த நினைவுகளுக்கு நன்றி' என சொல்லி நிகழ்ச்சியிலிருந்து விலகுவதை சூசகமாக சொல்வது போல் டுவீட் போட்டிருந்தார். இதனால், அவர் உண்மையிலேயே விலகிவிட்டார் என சோஷியல் மீடியாவில் தகவல்கள் பரவ ஆரம்பித்தன. இதனையடுத்து அந்த டுவீட்டை குரேஷி தற்போது நீக்கிவிட்டு, 'உடல் மண்ணுக்கு உயிர் குக் வித் கோமாளிக்கு' என புதிதாக டுவீட் போட்டுள்ளார். இதனால், அவர் உண்மையிலேயே நிகழ்ச்சியிலிருந்து விலகிவிட்டாரா? இல்லையா என்பது புரியாமல் ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.