100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி |
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான செந்தில் - ராஜலெட்சுமி தம்பதியினர் மேடை கச்சேரிகள், வெளிநாட்டு பயணம், சினிமாவில் பின்னணி பாடுவது என பிசியாக இருந்து வருகின்றனர். தவிரவும் வெள்ளித்திரையில் சில படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகின்றனர். அதிலும் ராஜலெட்சுமி 'லைசென்ஸ்' என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இதற்கிடையில் சொந்தமாக யு-டியூப் சேனல் வைத்திருக்கும் ராஜலெட்சுமி அவ்வப்போது சில ஹிட் பாடல்களுக்கு 'கவர்சாங்' பாடி பதிவேற்றுவார். அந்த வகையில் ஆங்கிலத்தில் பிரபலமான பாப் பாடகியாக வலம் வரும் டைலர் ஸ்விப்ட் பாடிய 'வில்லோவ்' என்ற பாடலுக்கான கவர்சாங்கை சில மாதங்களுக்கு முன் பாடி பதிவேற்றியுள்ளார். அந்த பாடலானது தற்போது இணையத்தில் கவனம் பெற தொடங்கியுள்ளது. ரசிகர்கள் அனைவரும் ராஜலெட்சுமியின் இந்த முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் பாராட்டி பதிவிட்டுள்ளனர்.