ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா |
தென்னிந்திய மொழிகளில் ஒன்றிரண்டு படங்களில் ஹீரோயினாக நடித்திருந்த ராதிகா ப்ரீத்தி, 'பூவே உனக்காக' தொடரின் மூலம் தமிழ் சீரியலில் என்ட்ரி கொடுத்தார். இளைஞர்களின் மனதை கவர்ந்த இந்த பேரழகி சீரியல் குழுவுடன் ஏற்பட்ட மனகசப்பின் காரணமாக சீரியலை விட்டு விலகினார். இதனால் அவரது ரசிகர்கள் பலரும் வருத்தமடைந்தனர். ராதிகாவோ இனி சினிமாவில் மட்டுமே இனி கவனம் செலுத்தப் போவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் அவர் புதிதாக நடித்து வரும் ப்ராஜெக்ட் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. ராதிகா ப்ரீத்தி புதிதாக படமொன்றில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த படத்திற்காக டப்பிங் பேசும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ள அவர், 'புதிய படம், புதிய தொடக்கம்' என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ராதிகா ப்ரீத்தியின் வெற்றிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.