'இந்தியன் 2' தீபாவளிக்கு வெளியிட திட்டம் | கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சூர்யா குடும்பத்தினர் | 'பொன்னியின் செல்வன் 2' டிரைலர் எப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்துள்ளது ? | இளையராஜாவை சந்தித்து நன்றி சொன்ன வெற்றிமாறன் | 'பத்து தல' வெற்றியைக் கொண்டாடிய படக்குழு | விடுதலை படக்குழுவினருக்கு தங்க நாணயம் தந்த வெற்றிமாறன் | பாலாவின் வணங்கான் அடுத்தகட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் துவங்குகிறது | முகேஷ் அம்பானி வீட்டு கலாச்சார நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் | பாரதிராஜா நடிப்பில் மனோஜ் இயக்கும் மார்கழி திங்கள் | 'பத்து தல'யை தடுமாற வைக்கும் 'விடுதலை' |
சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா சிறிய இடைவெளிக்கு பின் 'இனியா' என்ற சீரியல் மூலம் கம்பேக் கொடுத்தார். ஆல்யாவின் ரசிகர்களும் அவரது கம்பேக்கை நினைத்து மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில், சமீபத்தில் அவருக்கு ஏற்பட்ட விபத்தில் கால் எலும்பு முறிந்ததாகவும், தனக்காக பிரார்த்தனை செய்யுமாறும் இரு தினங்களுக்கு முன் மருத்துவமனையில் காலில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதன்பின் மறுநாளே ஷூட்டிங் செல்வதாக பதிவிட்டிருந்தார்.
தற்போது அவர் மீண்டும் மருத்துவமனையில் நோயாளிகள் உடுப்பில் சஞ்சீவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு 'அறுவை சிகிச்சைக்கு ரெடியாகிவிட்டேன். கொஞ்சம் பயமா இருக்கு' என்று பதிவிட்டுள்ளார். மேலும், கணவர் சஞ்சீவை பற்றி பெருமையாக கூறி 'சஞ்சீவ் எனக்கு கடவுள் கொடுத்த பரிசு' என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
ஆல்யாவின் இந்த பதிவானது வைரலாகி வரும் நிலையில், அவர் பூரண குணமடைய வேண்டும் என பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். அதேசமயம், ஆல்யாவுக்கு அறுவை சிகிச்சை என்பதால் ஷூட்டிங்கில் அவர் தொடர்ந்து நடிப்பாரா? இல்லை 'இனியா' தொடரிலிருந்து விலகிவிடுவாரா? எனவும் சிலர் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.