நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது | எனக்கு தடை விதிப்பவர்களிடம் ஏன் என்று கேளுங்கள்: ராஷ்மிகா | அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள பூமி பட்னேகர் |
பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி 78 நாட்கள் முடிந்துவிட்டது. இதுவரை 10 போட்டியாளர்கள் வெளியேறி உள்ள நிலையில், 9 போட்டியாளர்கள் விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை நோக்கி விளையாடி வருகிறார்கள். இந்த 9 நபர்களில் பிக்பாஸ் வீட்டில் இருக்க கொஞ்சம் கூட தகுதியேயில்லாத நபர் என்றால் அது அசீம் தான் என ரசிகர்கள் பலரும் சொல்லி வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்ததிலிருந்தே ஒவ்வொருவரையாக டார்க்கெட் செய்து சண்டையிட்டு, தனது அதிகார தொணியை குறிப்பாக பெண்களிடத்தில் அதிகம் காட்டி வந்தார். இது ரசிகர்கள் யாருக்குமே பிடிக்கவில்லை. ஆனால், இவ்வளவு வெறுப்பை சம்பாதித்தும் அசீம் எப்படி எல்லா எவிக்சனிலிருந்தும் தப்பித்து வருகிறார் என்பது பிக்பாஸுக்கு மட்டுமே வெளிச்சம். அசீமும் சமீபத்திய எபிசோடுகளில் நான் தான் டைட்டில் வெல்வேன் என ஓவர் கான்பிடன்ஸில் பேசி வருகிறார்.
இந்நிலையில், அசீம் குறித்து முன்னாள் போட்டியாளர்/நடிகை காஜல் பசுபதி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கடுமையாக சாடியுள்ளார். அவரது பதிவில், 'உனக்கெல்லாம் ஜெயிக்க வாய்ப்பே இல்ல தம்பி. ஏன்னா நீயெல்லாம் ஜெயிச்சா தவறான உதாரணமாகிடும்டா சைக்கோ முட்டாள்' என பதிவிட்டுள்ளார். காஜலின் இந்த பதிவுக்கு பலரும் தங்கள் ஆதரவினை தெரிவிப்பதோடு அசீம் குறித்து சக நடிகர் நடிகைகள் பேசிய பேட்டி வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.