லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
தென்னிந்திய திரையுலகில் 80-கள் காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த சீதா இயக்குநர்/நடிகர் பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின் குடும்பத்தை கவனிக்க வேண்டிய காரணத்தால் சினிமாவை விட்டு ஒதுங்கிவிட்டார். கருத்து வேறுபாடு காரணமாக பார்த்திபனை 2001ம் ஆண்டு விவகாரத்து செய்த சீதா அதன்பின் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் சின்னத்திரையில் எண்ட்ரி கொடுத்து பல தொடர்களில் நடித்தார். அப்போது சின்னத்திரை நடிகர் சதீஷை தனது 43வது வயதில் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆனால், சீதாவின் இந்த திருமணமும் தோல்வியில் தான் முடிந்தது. 2016ம் ஆண்டு சீதாவுக்கும் சதீஷுக்கும் விவாகரத்தானது.
சொல்லப்போனால் சீதாவின் 2 திருமணங்களுமே அவரது திரைப்பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இருப்பினும், தற்போது 55 வயதை எட்டியுள்ள சீதா சினிமாவிலும், சின்னத்திரையிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தவிர சோசியல் மீடியாவில் ஆக்டிவாக தன்னை பற்றிய அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில்,சீதா மாடலாக உடை அணிந்து அண்மையில் போட்டோஷூட் செய்துள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படங்களை பார்த்து, இந்த வயதிலும் இப்படி ஒரு அழகா? சீதாவுக்குள் இப்படி ஒரு கான்பிடன்ஸா? என பலரும் பாராட்டி வருகின்றனர்.