சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
சின்னத்திரை நடிகர் அசீம் பிக்பாஸ் வீட்டுக்குள் போனாரோ இல்லையோ தொடர்ந்து அவரை பற்றிய நெகட்டிவான கருத்துகள் வெளியே வலம் வந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 70 நாட்களை கடந்து பிக்பாஸ் கேமில் விளையாடி வரும் அசீமை வெளியே இருக்கும் ரசிகர்கள் பலரும் வாய் சவிடாலாக மட்டுமே தான் பார்க்கின்றனர். ஏனெனில், அவர் கேமில் சுவாரசியமாக எந்த பெர்பாமன்ஸும் இதுவரை செய்யவில்லை.
இதற்கிடையில், வெளியுலகில் அசீமுடன் நடித்தவர்கள், நண்பர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் கூட அசீமை கழுவி ஊற்றி வருகின்றனர். அந்த வகையில் நடிகை தேவிப்ரியா அளித்த பேட்டி ஒன்றில், 'பூவே உனக்காக தொடரில் அசீம் நடிக்க வரும்போதே நிறைய கண்டிஷன்கள் போட்டார். அதையெல்லாம் அட்ஜெஸ்ட் செய்துகொள்ளூம் நிலையில் தான் அன்று புரொடக்ஷன் நிலைமை இருந்தது. ஒருமுறை காட்சிக்கு சுத்தமாக பொருந்தாத ஒரு வசனத்தை அசீம் பேசினார்.
நான் அதைப்பற்றி கேட்டபோது 'இது குரானோ பைபிளோ கிடையாது. நான் சொந்தமாக தான் பேசுவேன்' என்றார். வசனத்தை டெவலப் செய்து பேசுவதாக சொல்லிவிட்டு சம்பந்தமே இல்லாமல் பேசினார். உண்மையில் அசீமுக்கு நடிக்கவே வராது. அவர் ஹீரோயிஸம் என்ற பெயரில் ஓவராக ஆட்டிட்டியூட் தான் காட்டுவார்' என கூறியுள்ளார்.