நடிகை கீர்த்தி சுரேஷின் திருமண தகவல் வதந்தி | ஜப்பானில் 100 நாட்கள் சாதனை படைத்த 'ஆர்ஆர்ஆர்' | சுதந்திர போராளி கதாபாத்திரத்தில் புகழ் | திலீப் படத்தில் இணைந்த ஜீவா | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சூர்யா - பிரித்விராஜ் சந்திப்பு | யுடியூப் விமர்சகரை திட்டியது ஏன்? : உன்னி முகுந்தன் விளக்கம் | விறுவிறு போஸ்ட் புரொடக்சனில் மம்முட்டி ஜோதிகாவின் காதல் ; தி கோர் | செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை தூக்கி எறிந்த ரன்பீர் கபூர் | சிவகார்த்திகேயனின் பதிவு : அதிக லைக்குகளைப் பெற்று முதலிடம் | அஜித் 62 பற்றி பரவும் புது சர்ச்சை? |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட்' நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே வருகிற டிசம்பர் 9 ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ளது. முதல் மூன்று சீசன்களின் வெற்றியைத் தொடர்ந்து 'டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட்' நிகழ்ச்சிக்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், தற்போது அந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அகிலா - பிரிட்டோ, நிஹாரிகா- கென்னி, பிரீத்தா சுரேஷ் - டொமினிக், வைஷ்ணவி - அவினாஷ் மற்றும் சரவண முத்து - தீக்ஷிகா ஆகியோர் இறுதிப்போட்டியில் தங்கள் முழுத்திறமையுடன் பலபரீட்சை செய்யவுள்ளனர். பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள இந்த இறுதிச்சுற்றில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அதற்கான போஸ்டர்களும் புரோமோக்களும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன. இந்த நிகழ்ச்சி ஞாயிறு மாலை 6மணிக்கு ஒளிபரப்பாகிறது.