நயன்தாராவின் 75வது படம் தொடங்கியது | அயோத்தி வெற்றி : இயக்குனருக்கு தங்க சங்கிலி பரிசளித்த சசிகுமார் | ராணி முகர்ஜி படத்திற்கு நார்வே எதிர்ப்பு | காமெடி நடிகர் மீது பாலியல் புகார் | 1500 கோடி சொத்தை சுருட்டவே 2வது திருமணம் : பவித்ராவின் முன்னாள் கணவர் குற்றச்சாட்டு | இத்தாலி, ஸ்பானிஷ் மொழிகளில் வெளியாகும் 'காந்தாரா' | அன்பே மகிழ்ச்சி, மகிழ்ச்சியே அன்பு - விக்னேஷ் சிவன் | 'பத்து தல' - சிம்பு பட டிரைலர்களில் புதிய சாதனை | ஒரு வருடத்தைக் கடந்த 'எகே 62' அறிவிப்பு : புதிய அறிவிப்பு எப்போது வரும் ? | ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் திருட்டு |
பிக்பாஸ் சீசன் 6 தற்போது 13 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகை என்ட்ரி கொடுக்கப்போகிறார் என சோஷியல் மீடியாவில் போஸ்டர்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அந்த நடிகை யார்? எதற்காக வீட்டிற்குள் வருகிறார்? வைல்டுகார்டு என்ட்ரியா? என ரசிகர்களும் குழம்பி வருகின்றனர். ஆனால், உண்மையில் அந்த நடிகை பிக்பாஸ் வீட்டில் போட்டியிட வரவில்லை. கெஸ்ட்டாக மட்டுமே வருகிறார். அவர் வேறுயாருமில்லை பிரபல சினிமா நடிகை அஞ்சலி தான். அஞ்சலி நடிப்பில் அதிக எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் 'ஃபால்' என்ற வெப் சீரியஸ் வருகிற 9 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளது. இந்த வெப்சீரியஸின் புரோமோஷனுக்காக தான் அஞ்சலி பிக்பாஸ் வீட்டிற்குள் செல்கிறார். முன்னதாக பிக்பாஸ் சீசன் 5-லும் 'ஓ மனப்பெண்ணே' படத்தின் புரோமோஷனுக்காக ப்ரியா பவானி சங்கரும் ஹரிஸ் கல்யாணும் இதேபோல் கெஸ்ட்டாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.