நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் தமன்னாவும், பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவும் காதலித்தனர். 'லஸ்ட் ஸ்டோரிஸ்-2' படத்தில் இருவரும் கிளுகிளுப்பான படுக்கையறை காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள். இவர்கள் திருமணம் கோவாவில் வெகு விமர்சையாக நடைபெற இருப்பதாக கூட தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமன்னா இப்போது முன் எப்போதும் விட பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அதிக வாய்ப்பு இல்லாத விஜய் வர்மாவுக்கு இது ஈகோவை ஏற்படுத்தி உள்ளது. படங்களை குறைத்துக் கொண்டு தன்னோடு அதிக நேரம் செலவிட வேண்டும் என்று விஜய் வர்மா வற்புறுத்தியதாக தெரிகிறது இதுவே இவர்கள் பிரிவுக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் விஜய் வர்மாவும் 'தங்கல்' படத்தில் நடித்த பாத்திமா சனாகானும், காதலிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது . இருவரும் மனிஷ் மல்ஹோத்ரா இயக்கத்தில் 'உல் ஜலூல் இஷ்க்' படத்தில் நடித்து முடித்துள்ளனர். இவர்கள் ஜோடியாக பல்வேறு இடங்களில் சுற்றித் திரிவதாகவும் பேசப்படுகிறது. ஆனால் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தமன்னா படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
பாத்திமா சனாக்கான், நடிகர் அமீர் கானை திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.