என்னைச் சுற்றி நல்ல ஆண்கள் இல்லை - அனுயா | இவை போதும் : இந்த உலகத்தையே மாற்றிவிடலாம் - சமந்தா | கருணாநிதி நூற்றாண்டு விழா தள்ளிவைப்பு | வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு பதில் அஜித்தா...! - உண்மை என்ன? | தர்ஷன், தர்ஷனா நடிக்கும் புதிய படம் | 'டாக்சிக்' - ரிலீஸ் தேதியுடன் வெளியான யஷ் அடுத்த பட அறிவிப்பு | தனுஷ் இயக்கும் படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | மம்முட்டிக்கு பதிலாக ஜாக்கி ஷெரப் | டெவில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாலகிருஷ்ணா 109வது படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை |
பிக்பாஸ் வீட்டில் என்ட்ரியாகியுள்ள அசீம் ஆரம்பம் முதலே அடாவடியாகவும், அதிகாரத்தை செலுத்தும் போக்குடனும் நடந்து கொண்டு வருகிறார். குறிப்பாக பெண் போட்டியாளர்களை மட்டம் தட்டி பேசுவதும், ஆண் போட்டியாளர்களிடம் திமிராக தள்ளுமுள்ளு சண்டையிட்டு ஒடுக்குவதையும் தொடர்ந்து செய்து வருகிறார். இந்தவாரத்தில் கூட அமுதவாணை கோபத்தில் அடித்து தள்ளிவிட்டு பின் மண்ணிப்பு கேட்டிருக்கிறார்.
இந்நிலையில், நடிகை சுபத்ரா அளித்துள்ள பேட்டியில் அவர் அசீம் குறித்து கூறிய கருத்துகள் தற்போது வைரலாகி வருகிறது. சுபத்ரா 'பூவே உனக்காக' சீரியலில் அசீமுடன் இணைந்து நடித்திருந்தார். அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் அசீமுக்கும் ஹீரோயினுக்கும் ஒருமுறை பயங்கர சண்டை நடந்ததாகவும் அதற்குப்பின் தேவிப்பிரியாவுடனும் அசீம் சண்டையிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், அவருக்கு முன்னால் யார் கைநீட்டி பேசினாலும் கோபாமாகிவிடுவார், சண்டை போடுவார். இப்போது பிக்பாஸ் வீட்டில் அவர் எப்படியிருக்கிறாரோ அதுதான் அவரது உண்மையான முகம் என்றும் கூறியுள்ளார். முன்னதாக அசீமின் சக நடிகரான அருண் ராஜனும் அசீம் குறித்து இதே கருத்துகளை கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.