தள்ளிப் போகிறது 'டுயூட்' | மீண்டும் விஷால், அஞ்சலி கூட்டணி | சிம்பு கையால் பட பெட்டிகளில் ரூ 500 : டி.ஆர் சொன்ன புது தகவல் | கமல்ஹாசன் தயாரிப்பில் பிரபுதேவா | 500 கோடி அறிவிப்பு, அப்புறம் பார்ட்டி, சொகுசு கார் உண்டா... | மீண்டும் கிசுகிசு : அர்ஜூன் தாஸ், ஐஸ்வர்ய லட்சுமி காதலா? | தெலுங்கு சினிமா ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது… | ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! |
சின்னத்திரை பிரபலங்களான ரச்சிதா மஹாலெட்சுமியும் தினேஷூம் ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பலவருடங்களாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக தற்போது தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இதுகுறித்து நடிகர் தினேஷ் கூட சமீபத்திய பேட்டி ஒன்றில் உறுதி செய்திருந்தார். எனினும், தங்கள் பிரிவு தற்காலிகமானது தான் எனவும் விரைவில் காலம் அனைத்தையும் சரி செய்யும் என்ற தொனியில் அதில் பேசியிருந்தார்.
இந்நிலையில், சீரியல்களில் தொடர் சறுக்கல்களை சந்தித்து வரும் ரச்சிதா தற்போது அதிரடியாக பிக்பாஸில் என்ட்ரி கொடுத்துள்ளார். இதனையடுத்து தினேஷ், 'பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மேலும் பல ரசிகர்களின் இதயங்களை வெல்ல வாழ்த்துகள்' என பதிவிட்டுள்ளார். பிரிந்து இருந்தாலும் காதல் மனைவியின் மேல் அன்பாக இருக்கும் தினேஷின் குணத்தை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.