ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
என்னதான் முன்னணி சேனல்கள் பல இருந்தாலும் மக்களின் ரசனை அறிந்து புதிய புதிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் முன்னிலை வகிக்கிறது விஜய் டி.வி. அதன்பிறகு அந்த நிகழ்ச்சியை காப்பி அடித்து மற்ற சேனல்கள் வேறு பெயரில் ஒளிபரப்பும். கோடீஸ்வரன், பிக் பாஸ் உள்ளிட்ட சர்வதேச நிகழ்ச்சிகளையும் கொண்டு வந்தது விஜய் சேனல். உள்ளூர் மக்களுக்கு ஏற்ற வகையில் கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளையும் வெற்றிகரமாக நடத்தியது.
அந்த வரிசையில் அடுத்து வரும் புதிய நிகழ்ச்சி ஊ சொல்றியா ஊஹும் சொல்றியா?. புஷ்பா படத்தின் புகழ்பெற்ற பாடலின் வரியையே தலைப்பாக்கி விட்டார்கள். இந்த நிகழ்ச்சியை மா.பா.கா ஆனந்தும், பிரியங்காவும் தொகுத்து வழங்குகிறார்கள். தொகுப்பாளர் வைக்கும் பணத்தை விட எதிரில் ஆடுகிறவர் அதிகமான தொகையை வைக்க வேண்டும். அவர் அதை ஏற்க மறுத்தால் மேலும் தொகையை வைக்க வேண்டும். இப்படி போகும் இந்த விளையாட்டு. இந்த புதிய கேம் ஷோம் வருகிற (செப்டம்பர்) 4ம் தேதி ஆரம்பமாகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.