இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

சின்னத்திரை ஆங்கர்களில் பிரபலமாக இருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. ஆனால், டிடிக்கும் முன்னாலேயே அவரது அக்கா ப்ரியதர்ஷினி பிரபல தொகுப்பாளினியாக இருந்து வந்தார். சில சீரியல்களிலும் அப்பாதே நடித்துள்ளார். திருமணத்திற்கு பின் மீடியா வெளிச்சத்தை விட்டு விலகியிருந்தவர் தற்போது 'எதிர்நீச்சல்' தொடரில் ரேணுகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவரது எதார்த்தமான நடிப்பு பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இந்நிலையில், 90ஸ் கிட்ஸ் முதல் 2கே கிட்ஸ் வரை எதிர்நீச்சல் ரேணுகாவை இன்ஸ்டாவில் தேடிப்பிடித்து பாலோ செய்ய ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் ப்ரியதர்ஷினியின் புரொபைலானது சமீப காலங்களில் வைரலாகி வருகிறது. சிறந்த பரதநாட்டிய கலைஞரான ப்ரியதர்ஷினி அடிக்கடி நடனம் ஆடியும், போட்டோஷூட்களையும் பதிவிட்டு வருகிறார். கல்லூரி செல்லும் வயதில் அவருக்கொரு மகன் இருந்தாலும் கட்டுடல் கலையாத அவரது அழகையும் பிட்னஸையும் பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது நீச்சல் குளத்தில் கணவருடன் நிற்கும் ப்ரியத்ர்ஷினியின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அதை பார்த்து நெட்டிசன்கள் 'கண்டுக்கொள்ளப்படாத பேரழகி' என ப்ரியதர்ஷினியை வர்ணித்து வருகின்றனர்.