ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி ஓரளவு ஹிட் அடித்த தொடர் திருமதி. ஹிட்லர். இதில், அமீத் பார்கவ், கீர்த்தனா பொதுவல், அம்பிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தோராயமாக ஒரு வருடம் ஒளிபரப்பான இந்த தொடர் சரியாக 356வது எபிசோடுடன் நிறைவுற்றது. இந்த தொடரில் ஹீரோயின் ஹாசினி கதாபாத்திரத்தில் துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைத்தவர் கீர்த்தனா பொதுவல். குறுகிய காலத்தில் ஏராளமான தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த கீர்த்தனா, தொடர்ந்து தமிழில் பல சீரியல்களில் கமிட்டாவார் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், தமிழ் சின்னத்திரை உலகில் அவருக்கான கதவுகள் திறக்கவில்லை. இந்நிலையில், அவர் தெலுங்கு சின்னத்திரையில் ஹீரோயினாக கமிட்டாகிவிட்டார். 'பத்மாவதி கல்யாணம்' என்கிற புதிய தொடரில் கீர்த்தனா ஹீரோயினாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ஜீ தமிழ், ரஜினி தொடரில் நடித்து வரும் ஹேமந்த் குமார் ஹீரோவாக நடிக்கிறார். பத்மாவதி கல்யாணம் தொடர் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஈ டிவி நெட்வொர்க் (தெலுங்கு) சேனலில் ஒளிபரப்பாக ஆரம்பித்துள்ளது.




