நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் |
கோடைகாலத்தின் சிறப்பு நிகழ்ச்சியாக ஜீ தமிழ் சேனல் வாரம்தோறும் புதிய திரைப்படங்களை ஒளிபரப்பி வருகிறது. அந்த வரிசையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (12ம் தேதி) இரவு 8 மணிக்கு சமீபத்தில் வெளியான கள்ளன் படத்தை ஒளிபரப்புகிறது. இந்த படத்தை பெண் இயக்குனரும், எழுத்தாளருமான சந்திரா தங்கராஜ் இயக்கி உள்ளார். கருபழனியப்பன், நிகிதா மற்றும் வேல ராமமூர்த்தி, நமோ நாராயணன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.
வேட்டைக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த வேலு. தந்தையின் வாக்குபடி காட்டு பன்றிகளை வேட்டையாடி பிழைக்கிறார். அவருக்கு துப்பாக்கி செய்யவும், துப்பாக்கியை பயன்படுத்தவும் தெரியும். அரசாங்கம் வனவிலங்குகளை வேட்டையாட தடைபோட, வேலை இல்லாமல் இருக்கும் வேலு நண்பர்களின் சூழ்ச்சியால் தவறான பாதையில் பயணிக்கத் தொடங்குகிறார்.
முதலில் சிறிது சிறிதாக ஆரம்பிக்கும் அவரின் குற்றங்கள், கொலை அளவுக்கு செல்கிறது. இடையில் காதல் மலரும். வேலுவுக்கு, காதலியுடன் சேர்ந்து வாழ, செய்யும் குற்றங்கள் என்ன நிலையை ஏற்படுத்துகிறது என்பதை விவரிப்பதே கள்ளனின் கதையாகும்.