அடுத்தடுத்து திரைக்கு வரும் திரிஷா படங்கள் | மார்ச் 12ல் வெளியாகும் மேட் இன் கொரியா | தெலுங்கில் பிஸியாகும் ருக்மணி வசந்த் | சர்வதேச விருதினை வென்ற ‛பூங்' படக்குழுவை பாராட்டிய பிரதமர் மோடி | திரிஷ்யம் 3 படத்தில் நடிக்க மறுத்த வெங்கடேஷ் | 20 ஆண்டுகளுக்கு பின் தென்னிந்திய படத்தில் சஞ்சீதா ஷேக் ரீஎன்ட்ரி | மீண்டும் இணையும் ‛மை லார்ட்' கூட்டணி | புருஷன் படப்பிடிப்பு துவங்கியது | உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' |

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் குயின் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான டாஸ்க்குகள் நடத்தப்பட்டு அதில் சிறப்பான குயின் யார் என்பதையும் நிகழ்ச்சி குழு அறிவித்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு பொதுப்பணியாளர்களின் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில் சின்னத்திரை குயின்கள் அவர்களுடன் சேர்ந்து பணியாற்றுகின்றனர். இதற்காக வெளியிடப்பட்ட ப்ரோமோவில் சுவாதி சர்மா, ஜனனி அசோக்குமார் இருவரும் துப்பரவு தொழிலாளர்களுக்கு உதவி செய்கின்றனர். தேஜஸ்வினி கெளடா அம்மா உணவகத்தில் சமையல் செய்கிறார். வீஜே பார்வதி நர்ஸாக பணிபுரிகிறார். இந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகி பேசு பொருள் ஆகி உள்ளது. மேலும், மற்ற நடிகைகள் என்னென்ன பணி செய்கின்றனர் என்பது அடுத்த ப்ரோமோவில் காட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.