'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சின்னத்திரை பிரபலங்களான நவீன் குமார் - கண்மணி சேகரின் நிச்சயதார்த்த வைபவம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. கலர்ஸ் தமிழின் 'இதயத்தை திருடாதே' சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார் நவீன் குமார். இவருக்கும் அதே தொடரில் ஹீரோயினாக நடித்து வரும் ஹீமா பிந்துவுக்கு காதல் என இணையத்தில் அடிக்கடி கிசுகிசுக்கள் வெளி வந்தது. ஆனால், இருவரும் நாங்கள் நல்ல நண்பர்கள் என்றே சில நேர்காணல்களில் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், சமீபத்தில் நவீன் குமார் செய்தி வாசிப்பாளரான கண்மணி சேகரனை காதலிப்பதாக அறிவித்தார். இதனையடுத்து இந்த காதல் ஜோடிகளின் கதை பலவாறாக இணையத்தில் பேசப்பட்டு வந்தது. தற்போது இவர்களது நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. நவீன் மற்றும் கண்மணி என இருவருக்கும் ரசிகர்கள் அதிகம் என்பதால் இவர்களது நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சக நட்சத்திரங்கள், ரசிகர்கள் என பலரும் இருவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.