சந்தானத்தின் ‛லவ் பைட்' | ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போகும் துல்கர் படம் | பிளாஷ்பேக் : போலீஸாக சில்க் ஸ்மிதா | பிளாஷ்பேக் : ஒற்றைக்காலில் நடித்தே உயிர் விட்டவர் | பாடல் சர்ச்சை : மகளிர் ஆணையம் முன்பு ஆஜராகி மன்னிப்பு கேட்ட நோரா பதேகி | சல்மான்கான் - நயன்தாரா படத்தின் டைட்டில் இதுதானா ? | கொல்லப்பட்ட விலங்கு நல ஆர்வலர் : கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட பார்வதி | திரிஷ்யம் 3 படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியானது | மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் : விஜய்க்கு ஆதரவாக திரையுலகினர் குரல் | 50வது நாளில் 'யூத்' |

சின்னத்திரையின் பிரபல வீஜேக்களில் ஒருவர் கீர்த்தி. கிகி விஜய் என செல்லமாக அழைக்கப்படும் இவர் ஒரு நல்ல டான்சரும் கூட. ஒரு வீஜேவாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் தனக்கென தனி ஸ்டைலை வைத்திருக்கும் கீர்த்தி, தனது வீஜே பயணத்தின் 15 வருடத்தை வெற்றிகரமாக கடந்துள்ளார். அவரது இந்த சாதனையை அண்மையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி சிறப்பித்து கொண்டாடி, நினைவு பரிசையும் வழங்கியுள்ளது.
அதன் புகைப்படங்களை பகிர்ந்துள்ள கிகி விஜய், 'இந்த 15 வருடங்களில் பல தடைகள், ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளேன். இந்த பயணம் எளிமையானதல்ல, எனினும் உங்கள் அன்பு, ஆதரவுடன் இந்த நிலையை எட்டியுள்ளேன். உங்கள் அன்பு ஆதரவில்லாமல் இந்த வெற்றி சாத்தியமல்ல' என அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அவரது இந்த சாதனைக்கு தற்போது சக தொலைக்காட்சி பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.