'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
ஜீ தமிழ் டிவியில் தொடர்ச்சியாக புத்தம் புதிய தொடர்கள் ஒளிப்பரப்பாகி வருகின்றன. அந்தவகையில் ஏப்., 18 முதல் 'தவமாய் தவமிருந்து' என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது. பிரபல நடிகர்கள் 'பசங்க' சிவகுமார் மற்றும் அனிதா ஆகியோர் இதில் மார்க்கண்டேயன் மற்றும் பார்வதியாக முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நமது வாழ்க்கையோடு நெருங்கிய கதையாக மட்டுமில்லாமல், 'தவமாய் தவமிருந்து' நல்ல ஒரு பொழுதுபோக்காகவும்; வாழ்க்கை விடுக்கும் அனைத்து சவால்களையும் அவர்கள் எப்படி தைரியமாக எதிர்கொள்கிறார்கள் என்பதன் மூலம் மக்களுக்கு நல்ல கருத்தினையும் கூற உள்ளது.
தங்களது நான்கு பிள்ளைகளான - ரேவதி, ராஜேந்திரன், ரவி மற்றும் மலர் ஆகியோரை வளர்த்து ஆளாக்க தங்கள் வாழ்க்கையை முழுவதையும் அர்ப்பணிக்கும் தம்பதியான மார்க்கண்டேயன் மற்றும் பார்வதி ஆகியோரது கதையே 'தவமாய் தவமிருந்து'. எல்லா பெற்றோர்களை போலவும் தங்களது குழந்தைகளுக்காக தன்னலமின்றி அனைத்தையும் அவர்கள் வழங்குகிறார்கள். ஆனால் மார்க்கண்டேயனின் பணி ஓய்விற்குப் பிறகு அவர்களது பிள்ளைகளால் கைவிடப்படுகிறார்கள். அந்த தம்பதியினர் அச்சமின்றி எப்படி தங்கள் சூழ்நிலையை எதிர்கொள்கிறார்கள்; அவர்களின் இளைய மகள் அந்த பெற்றோருக்கு எப்படி நம்பிக்கை விளக்காக இருக்கிறாள். தன் பெற்றோரது வாழ்க்கையின் இரண்டாவது அத்தியாயத்தை எப்படி அவள் வெற்றிகரமான ஒன்றாக மாற்ற உதவுகிறாள் என்பதே இதன் சுவாரஸ்யமான கதைக்களமாகும்.
மனதைத் தொடும் இந்த மார்க்கண்டேயன் மற்றும் பார்வதியின் உணர்வுபூர்ணமான கதையான 'தவமாய் தவமிருந்து' தொடரை ஏப்ரல் 18 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஜீ தமிழில் கண்டு மகிழுங்கள்.