சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி |
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு காதல் ஜோடி பிரபலமாகிவிடும். அந்த வகையில் சீசன் 5-ல் பிரபலமான காதல் ஜோடி தான் அமீர் - பாவனி ரெட்டி. முத்த சர்ச்சை, காதல் விவகாரம் என அமீர் - பாவனியின் பெயர் அடிக்கடி அடிப்பட்டது. ஆனால், அப்போது நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் தான் என இருவரும் பூசி மெழுகி வந்தனர்.
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகும் அமீர் - பாவனி நெருக்கமான நண்பர்களாக தான் வலம் வந்தனர். இருவரும் சேர்ந்து ஒரு பாடலுக்கு அழகான கவர் டான்ஸ் ஒன்றையும் ஆடி வெளியிட்டிருந்தனர். ரசிகர்கள் மத்தியில் அந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாவனியிடம், அங்கிருந்த மாணவிகள் அமீர் பற்றியும் அமீருடன் கல்யாணமா? எனவும் கேள்விகள் எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த பாவனி, 'அமீர் நல்லா இருக்கார். நீங்க அவரையும் அழைச்சிருக்கனும். கல்யாணத்த பத்தி சொல்லனும்னா! எங்க வீட்லையும் ஆர்வமா தான் இருக்காங்க. அமீர், அமீர்னு தான் சொல்றாங்க. தெரியல. அப்படி ஒன்னு நடந்தா கட்டாயம் உங்க கிட்ட முதலில் சொல்றேன்' என பதிலளித்துள்ளார். காதல் டூ கல்யாணம் மாதிரி இது நட்பு டூ கல்யாணமா இருக்கலாம்.