சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் | சூர்யா 46 இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் | ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை | 'தக் லைப்' டிரைலர் : 24 மணி நேர சாதனை என்ன? | 'ரெட்ரோ' 235 கோடி வசூல்: ஷாக் ஆன ரசிகர்கள் - உண்மை என்ன? | ஆறு மாத இடைவெளியில் அழகாக யோசிக்கும் ஆதிக் | விஜய்சேதுபதி சொன்ன சைக்கிள் கதை |
பிக்பாஸ் சீசன் 5 முடிந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இருப்பினும் பிக்பாஸ் சீசன் 5-ல் விளையாடிய பிரபலங்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் டாப்பிக்காக இடம் பிடித்து வருகின்றனர். இதில் பிக்பாஸ் சீசன் 5ல் விளையாடிய பிரியங்கா, பாவனி ரெட்டி, வருண், சிபி மற்றும் அபிஷேக் ராஜா ஆகியோரின் நட்பு பற்றி அனைவருக்கும் தெரிந்ததே. சீசன் 5 நிகழ்ச்சிக்கு பிறகு தங்கள் நட்பை வெளிக்காட்டும் வகையில் அடிக்கடி சந்தித்து கொள்கின்றனர். தற்போது மீண்டும் ஒரு ரீயூனியனை போட்டுள்ள இந்த நட்புக்குழு சென்னையில் ஏதோ ஒரு சாலையில் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. முன்னதாக ஐதராபாத்தில் இந்த நண்பர்கள் கூட்டம் ஒன்று கூடிய போது, ஆங்கர் ப்ரியங்கா, பன்னாக சில சேட்டைகள் செய்து விளையாடிய வீடியோக்களை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.