பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை |

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் 'சூப்பர் குயின்' நிகழ்ச்சி பெண் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சாதனை பெண்களை கவுரவிக்கும் பொருட்டு தயாரிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முதல் கட்டமாக சின்னத்திரை பெண் பிரபலங்கள் 12 பேர் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.
ஒவ்வொரு போட்டியாளரின் பின்னணி கதைகளும், எடுத்துக்கொண்ட துறையில் அவர்கள் சவால்களை சமாளித்து சாதித்து வருவதும் ரசிகர்கள் மனதை கவர்ந்து வருகின்றன. இந்நிலையில் பிரபலங்கள் மட்டுமல்லாது, அன்றாட வாழ்வில் சாதனை படைத்து வரும் குடும்ப பெண்களையும் பெருமைப்படுத்தும் வகையில் 'உங்க வீட்டு சூப்பர் குயின்ஸ்' என்ற புதிய முயற்சியை ஜீ தமிழ் சேனல் எடுத்துள்ளது.
இதற்கு உங்களது வீட்டில் இருக்கும் பெண்ணோ அல்லது உங்களுக்கு தெரிந்த நண்பர்களோ சமூகத்திற்காக ஏதேனும் ஒரு விதிவிலக்கான செயலை செய்திருந்தால் அவர்களை இந்நிகழ்ச்சியில் அறிமுகம் செய்து வைக்கலாம். அவரது புகைப்படம் அல்லது குடும்ப புகைப்படம் அல்லது செல்பி வீடியோவை பதிவு செய்து, அதற்கு ஏற்ற தலைப்பை கொடுத்து #superqueen என்கிற ஹேஷ்டேக்குடன் ஜீ தமிழ் சேனலை டேக் செய்து பதிவிட வேண்டும்.
இதில் ஒவ்வொரு வாரமும் தேர்ந்தெடுக்கப்படும் வெற்றியாளர்களில் 15 பேர், 'சூப்பர் குயின்' நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் பிரபலங்களுடன் இறுதில் சுற்றில் பங்கேற்று விளையாட வாய்ப்பு வழங்கப்படும். இறுதி போட்டியில் அவர்கள் அனைவரும் கெளரவிக்கப்படுவார்கள் என ஜீ தமிழ் நிறுவனம் அறிவித்துள்ளது.
சூப்பர் குயின் நிகழ்ச்சி ஞாயிறு தோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.




