இயக்குனர் மீது பொய் வழக்கு ; நடிகையை தொடர்ந்து அவரது வழக்கறிஞரும் கைது | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை நிறுத்தி வைத்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் | காந்தாரா 2வில் ‛கனகாவதி' ஆக ருக்மணி வசந்த் | கூலி படத்தில் அதிர்ச்சியூட்டும் இடைவேளை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட தகவல் | அஜித் 64 படத்தில் இணையும் இரண்டு நாயகிகள் | செல்வாக்கு மிக்கவர்களுக்கு கூட வளைந்து கொடுக்க மறுக்கும் சென்சார் போர்டு? | அகண்டா 2 : டப்பிங் பணிகளை நிறைவு செய்த பாலகிருஷ்ணா | வார் 2 படத்தில் சர்ப்ரைஸ் பாடல் | இயக்குனர் ஆகிறார் ரோபோ சங்கர் | அப்பா பற்றி ரஜினி சொன்னதை வெளியில் சொல்ல மாட்டேன் : கமல் மகள் ஸ்ருதி |
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் மீண்டும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக மீண்டும் தாடி பாலாஜி கலந்து கொண்டுள்ளார். முன்னதாக பிக்பாஸ் 2-வது சீசனில் தாடி பாலாஜி அவரது மனைவி நித்யாவுடன் ஜோடியாக கலந்து கொண்டார். தமிழ் பிக்பாஸ் வரலாற்றிலேயே ஜோடியாக நுழைந்தது இவர்கள் தான். ஆனால், பிக்பாஸ் சீசன் 2 முடிவதற்குள் தாடி பாலாஜிக்கும் நித்யாவுக்கும் இருந்த பிரச்னை பூதாகரமாக வெடித்து பெரிதாகி போலீஸ் ஸ்டேஷன் வரை விவகாரம் சென்றது. ஜோடியாக வந்தவர்கள் இப்போது தனித்தனியாக பிரிந்து வாழ்கின்றனர். நித்யா தற்போது மகள் போஷிகாவுடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் நுழைந்திருக்கும் தாடி பாலாஜி தன்னுடைய கேரக்டரை பற்றி தவறாக பேசுவதாக நித்யா புகார் கூறியுள்ளார். மேலும், பாலாஜி தொடர்ந்து இதுபோல் செய்தால், குடிபோதையில் தன்னைப்பற்றியும், தன் மகளை பற்றியும் பாலாஜி தவறாக பேசிய வாய்ஸ் ரெக்கார்டை வெளியிடுவேன் எனவும் எச்சரித்துள்ளார். நித்யாவை தொடர்ந்து பாலாஜியின் மகள் போஷிகாவும், 'அப்பா நீங்க இப்படி பண்ணாதீங்க. எனக்கு எது நல்லது கெட்டதுன்னு தெரியும். எனக்கு மெச்சூரிட்டி இருக்கு' என பேசியுள்ளார்.
சமூகவலைதளத்தில் வெளியான இந்த வீடியோ பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பெற்ற மகளை திட்டுமளவிற்கு பாலாஜி இவ்வளவு மோசமானவரா? என பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.