ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஐஸ்வர்யா கிருஷ்ணன். இவர், பிரபலங்களின் பிட்னஸ் டிரெயினராகவும், மாடலாகவும் அதிகம் அறியப்படுகிறார். சர்வைவர் நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்ததையடுத்து அதில் கலந்து கொண்ட பிரபலங்கள் மீடியா மற்றும் சோஷியல் மீடியாக்களின் மூலம் தங்களது அடுத்த பிளான் குறித்து பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், ஐஸ்வர்யா மீண்டும் ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் தகவல் வெளியாகியுள்ளது. ஐஸ்வர்யா ஜீ தமிழின் 'சூப்பர் குயின்' என்கிற புதிய ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்கிறார். அந்த நிகழ்ச்சியின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஐஸ்வர்யா கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆனால், இந்த நிகழ்ச்சி குறித்த மற்ற தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகாத நிலையில், ஞாயிறு தோறும் ஒளிபரப்பாகும் என தெரிய வருகிறது.